கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
பி.ஜே.பி 104 இடம்தான் பிடித்துள்ளது என்று சொல்ல வேண்டாம். கடந்த தேர்தலில் வெறும் 40 இடத்தில் இருந்த நாங்கள், தற்போது 104 இடத்துக்கு வந்துள்ளோம். கர்நாடகாவில் பி.ஜே.பி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படாமல் மத்திய அரசு செயல்படும். மத்திய அரசுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது.
பி.ஜே.பி மதம்சார்ந்த கட்சி என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், மத சார்புள்ள கட்சி காங்கிரஸ்தான். கர்நாடகாவில் பிரிவினை யைத் தூண்டியவர்களான வாட்டாள் நாகராஜ், சித்தராமையா போன்றவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவரிடம், பி.ஜே.பி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில் எப்படி கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற கேள்விக்கு தமிழிசை, `பொறுத்திருங்கள். அங்கு நிச்சயம் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’’ என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்