img
img

கர்நாடக சட்டசபை தேர்தல்; பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன
சனி 12 மே 2018 18:04:29

img
பெங்களூரு,
 
கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தொடங்கியது.  இதில் வாக்காளர்கள் வரிசையில் வந்து வாக்களித்து வருகின்றனர்.
 
தேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போ டுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார்.  இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார். இதேபோன்று முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, தனது மனைவி மற்றும் மக னுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து உள்ளார்.
 
இதேபோல் கிரிக்கெட் நட்சத்திரம் அனில் கும்ப்ளேவும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். வாக்குச்சாவடியில் சக வாக்காளர்களுடன் வரிசையில் காத்து நின்ற அவர் அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அதில், ‘நான் ஓட்டு போடுவதற்காக காத்திருக்கிறேன். இதேபோல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும்’ என கும்ப்ளே கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் உள்ள பாதாமி பகுதியில் சித்தராமையா-ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் கைகலப்பாகவும் மாறியுள்ளது. மேலும் சில இடங்களிலும் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15 ந்தேதி எண்ணப்படுகின்றன.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img