தமிழகத்தில் நடப்பது "போலீஸ் ராஜ்யமா? என - மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியுள்ளதாவது,
மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தும் முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரை கைது செய்வ தற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் இதற்கு முன் ஆய்வுக்காக சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது அமைதி காத்த தமிழக காவல்துறை, இப்போது விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும்போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ் ராஜ்யம்" தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டவா? இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்