புதுடெல்லி,
கர்நாடகாவில் வரும் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெங்களூருவை ‘குப்பை நகரம்’ எனக் கூறியிருப்பது அவமதிப்பதாக உள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கர்நா டகாவில் ஆட்சி பொறுப்பிலிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம், பாஜக அரசை காட்டிலும் 1100 சதவீதத்திற்கும் அதிகமான கட்டிடங்களை நகர்ப்பகு திகளில் எழுப்பியுள்ளது என கூறிய ராகுல் காந்தி, தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, “அன்புள்ள மோடி, இந்தியாவின் பெருமை மிக்க பூங்கா நகரமான பெங்களூருவை குப்பை நகரம் என நீங்கள் கூறியிருப்பது அவமதிப்பாக உள்ளது.
உங்களுக்கு இயல்பாகவே அடுக்கடுக்கான பொய்களை கூற தெரியும். ஆனால் நகரத்தின் அடுக்கடுக்கான கட்டிடங்களை காணுவது என்பது உங்களுக்கு கடினமாக தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்