சினிமாவில் பேயாகவும் வில்லியாகவும் வாள் வீசி அதிரடி சண்டை போடும் மகாராணி வேடங்களிலும் நடிக்கும் கதாநாயகிகள் நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்து பயப்படுகிறார்கள். நடிகை காஜல் அகர்வால் தன்னை பயமுறுத்துவது எது என்று சோல்கிறார்: பெண்களை கிளி, அன்னத்துக்கு ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் எனக்கு பறவைகளை பார்த்தால் பயம். சிறுவயதில் தோழிகள் வீட்டுக்கு போகும்போது அவர்கள் வளர்க்கும் கிளி, புறாக்களை பார்த்து பயப்படுவேன். நடிகை சுருதிஹாசன் கூறியதாவது: நிறைய பேர் கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படுவார்கள். எனக்கு பல்லி, பாம்பு என்றால் பயம். வீட்டில் பல்லியை பார்த்து விட்டால் அதை விரட்டி வெளியே அனுப்பும் வரை ஓயமாட்டேன். பல்லி வெளியே போ விட்டது என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் நிம்மதியாவேன். நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது: எனக்கு ஒரு விசித்திரமான பயம் இருக்கிறது. நான் நீச்சல் கற்று இருக்கிறேன். ஆனாலும் கடலில் படகிலோ கப்பலிலோ பயணம் செயும்போது பயத்தில் உயிரை கையில் பிடித்துக்கொள்வேன். விமானம் உயரே ஏறும்போதும் கீழே இறங்கும்போதும் பயத்தில் கண்களை மூடிக்கொள்வேன். உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது கீழே விழுந்து விடுமோ என்ற நினைப்பில் அச்சப்படுவேன். நடிகை டாப்சி கூறியதாவது: சிறு வயதில் இருந்தே டெலிவிஷன்களில் திகில் படங்கள் பார்த்து எனக்கு பே நம்பிக்கை வந்து விட்டது. இதனால் இருட்டை பார்த்து பயப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்