img
img

இந்த வாரம் 3 புதுப்படம் வெளியீடு!
வியாழன் 26 ஏப்ரல் 2018 15:48:10

img
சென்ற வாரம் மெர்குரி படம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த வாரம் தியா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட 3 தமிழ்படங்கள் திரையரங்குகளில் வெளி யாக உள்ளன. 
 
இந்நிலையில், இந்த வாரம் எ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தியா’ என்ற படம் வெளியாகிறது. முன்னதாக, இப்படத்திற்கு ‘கரு’ என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடித்திருக்கும் ‘பக்கா’ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இது தவிர, நவரச நாயகன் கார்த்தி மற்றும் அவரது மகன் ‘கெளதம் கார்த்தி’ இணைந்து நடித்திருக்கும் ‘மிஸ்டர். சந்திர மௌலி’ படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஹாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் பல சூப்பர் கதாநாயகன்களை வைத்து உருவாகும் ‘அவெஞ்சர்ஸ் இனிபினிட்டி வார்’ படமும் இந்த வாரம் வெளியாக உள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img