செவ்வாய் 15, அக்டோபர் 2024  
img
img

 மணிரத்னம் படக்குழுவில் இணைந்த விஜய் சேதுபதி
வியாழன் 26 ஏப்ரல் 2018 15:45:17

img
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி போலீசாகவும் நடிக்கிறார்கள். இதில் சிம்பு, அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்ட நிலை யில், அடுத்ததாக விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
 
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி `செக்கச் சிவந்த வானம்' படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மே இரண்டாவது வாரம் வரை படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிப்பதாகவும், ஜோதிகா ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் முக்கிய கதா பாத்தி ரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img