சென்னை:
திமுகவின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் பாரதிய ஜனதா கட்சியின் பி டீமாக அக்கட்சி உருவெடுக்கிறதோ? என்று மிரண்டு போய் உள்ளனர் திமுக தொண்டர்கள். 2014 லோக்சபா தேர்தலின் போதே திமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் சிலர் பாஜக அணிக்கு தாவுவதில் மும்முரம் காட்டினர். ஆனால் இன்னமும் கொள்கை பிடிப்புடன் இருக்கும் சில தலைவர்கள் முயற்சியால் பாஜக அணியில் திமுக இடம்பெறவில்லை.
இதன்பின்னரும் அந்த 2-ம் கட்ட தலைவர்களின் பாஜக பாசம் விட்டுவிடவில்லை. திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்க வந்த போது அப்படி ஒரு புளகாங்கிதத்தில்தான் அந்த புள்ளிகள் வலம் வந்தனர். இன்னொருபுறம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்க ப்பட்டது முதல் அதிமுக மீதான அதீத பாசத்தைத்தான் அவர் காட்டி வருகிறார்.
திமுகவை பகிரங்கமாக விமர்சிக்கவும் திருநாவுக்கரசர் தயங்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் திருநாவுக்கரசரின் அதிமுக நெருக்கம் இன்னமும் அதிகரித்தது. இதையே வாய்ப்பாக வைத்துக் கொண்டு காங்கிரஸை கழற்றிவிடுவதில் திமுகவின் பாஜக ஸ்லீப்பர் செல்கள் மும்முரமாக களம் இறங்கின. தமிழகத்தின் அரசியல் களம் திமுகவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது.. ஆனால் டெல்லியின் கண்ணசைவுகளுக்கேற்பவே திரை மறைவில் இயங்குவதில் மட்டும் திமுக தீர்மானமாக இருந்தது.
அன்றைய ஓபிஎஸ் அரசுக்கும் இன்றைய ஈபிஎஸ் அரசுக்கும் நெருக்கடி வரக்கூடாது என்கிற பாஜகவின் வியூகங்களுக்கு கை கொடுத்தது திமுக. இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத அணி குறித்து தேசிய அளவில் விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் தொடங்கின. பாஜகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் தலைமையில் ஒரு வலுவான அணி அமைந்தால் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஓரணிக்கு சென்றுவிடும். ஆகையால் 3-வது அணி ஒன்று அமைய வேண்டும்; அது தங்களுக்கு சாதகம் என விரும்புகிறது.
இதனைத்தான் 3-வது அணி பேச்சுகள் தொடங்கிய போதிருந்தே இடதுசாரிகள் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால் திமுக தலைமையோ தொடக்கம் முதலே 3-வது அணி முயற்சிக்கு சிக்னல் கொடுத்துக் கொண்டே வந்தது. இதன் அடுத்த கட்டமாகத்தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து டனான திமுக தலைமையில் தொடர் சந்திப்புகள். இச்சந்திப்புகளுக்குப் பின்னர் காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுவது என்பதில் திமுக தீர்மானமாகிவிட்டது.
இதை வெளிப்படுத்தும்விதமாகத்தான் திடீரென மமதா பானர்ஜியின் 3-வது அணி முயற்சிக்கு மீண்டும் பாராட்டு தெரிவித்திருக்கிறது திமுக. திமுகவைப் பொறுத்தவரையில் என்னதான் இந்துத்துவா எதிர்ப்பு, திராவிட இயக்கம் என பேசிவந்தாலும் அக்கட்சிக்கு பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. ஏனெனில் தான் அரசியலில் இருக்கும் வரை ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என தினகரன் அறிவிக்கிற அளவுக்கு கூட திமுக தலைமை இதுவரை திட்டவட்டமான அறிவிப்பை வெளியிடவில்லை.
திடீர் திடீர் என இந்துத்துவா எதிர்ப்பு, பாஜக விமர்சனத்தை முன்வைத்தாலும் அதன் மீதான நம்பகத்தன்மை தொண்டர்களிடம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் திமுகவின் எதிர்காலம் குழிதோண்டி புதைத்ததாகிவிடும். அதனால்தான் திமுக இன்னமும் பாஜகவுடன் நெருங்குவதற்கு பம்முகிறது. ஆனால் அதன் போக்குகளும் செயல்பாடுகளும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு உதவும் வகையில்தான் இருக்கிறது. இதன் ஒரு பகுதிதான் 3-வது அணிக்கான ஆதரவாக பார்க்கப்படுகிறது. திமுக தலைமையின் இந்த முடிவுகள் அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்