img
img

இயக்குனருடன் தமன்னா மோதல்? 
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:32:50

img
குயின் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கும் இயக்குனர் நீல கண்டாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகை தமன்னா 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மறுபதிப்பு செய்கின்றனர். இந்த படத்தை ரேவதி இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்தும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நீலகண்டாவும் இயக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமன்னா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் இயக்குனருக்கும், தமன்னாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த படத்தை இயக்க முடியாது என்று சொல்லி நீல கண்டா வெளியேறி விட்டார் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவியது.
 
தெலுங்கிலும் ரமேஷ் அரவிந்தை வைத்தே படத்தை இயக்க படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமன்னாவும் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். தமன்னா படத்தில் இருந்து விலகவில்லை என்றும் தமிழ், கன்னட படங்கள் முடிந்த பிறகு தெலுங்கு படம் தயாராகும் என்றும் அவர்கள் கூறினர். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img