தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் என்றும், ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்றும் முடிவு செய்துள்ளேன் என்று நடிகர் மகேஷ்பாபு கூறியுள்ளார்.
‘ஸ்பைடர்’ படம் குறித்து நடிகர் மகேஷ்பாபு ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியதாவது: ‘’ஸ்பைடர் படம் நடித்து முடித்து ‘வெளியீடு’ செய்த பின்னர்தான் சில தவறுகள் செய்திருந்ததை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அந்த தவறுகளை சரிசெய்ய எந்த வாய்ப்புமே அப்போது எங்களுக்கு இல்லை. ஆனால், தவறுகளை நிச்சயமாக உணர்ந்தோம். தமிழில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை அப்படியே தெலுங்கு மொழிக்கு எடுத்து சென்றோம்.
அந்த சமயத்தில் தெலுங்கு ரசிகர்களின் எண்ண ஓட்டத்துக்கேற்ப படத்தில் சில மாற்றங்களை செய்ய தவறி விட்டோம். அதில் இருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். இனி, இதுபோன்ற ஒரு தவறை என் வாழ்நாளில் செய்யக்கூடாது என்றும், ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்றும் முடிவு எடுத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.