சென்னை:
ஒரு கேள்வி கேட்டாலும் வரலட்சுமி சரத்குமார் நல்ல கேள்வியாக கேட்டுள்ளார். கதுவா, சூரத் உள்ளிட்ட இடங்களில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகை யில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த முடிவை வரவேற்றாலும் அனைவரின் மனதிலும் ஒரேயொரு கேள்வி தான் எழுகிறது.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது சரியா. இது என்ன உங்களின் நியாயம் என்று தான் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதின்வயதினர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டால் என்ன நடக்கும்..? அனைத்து பலாத்கா ரங்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை தொடக்கூடாது #NomoreRape.. #deathforallrapists..!!என்று ட்விட்டரில் குமுறியுள்ளார் வரலட்சுமி.
பலாத்காரம் செய்தாலே தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளியான அவசர சட்டத் திருத்தம் மகிழ்ச்சி அளித்தாலும் பலருக்கும் அதிருப்தியை அளித்துள்ளது. சிறுமிகளை காப்பாற்றி பெண்களை பலி கொடுப்பதா என்று மக்கள் கேட்கிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்