img
img

வைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்
சனி 21 ஏப்ரல் 2018 15:37:11

img

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து திரையரங்கில் காண்பிக்கப்படும் விளம்பர துணுக்கு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழக முதல்வர்களாக கருணாநிதி, மறைந்த ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது தங்களை முன்னிறுத்தி பல தளங்களிலும் விளம்ப ரங்கள் செய்வது வழக்கம். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டங்களில் அவ்வாறு செய்யவில்லை. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, மீண்டும் முதல்வர் போட்டோக்களுடனான விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளன.

அதிமுக அரசின் முகமாக மக்களிடம் பிரபல்யத்தை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூற லாம். இந்த நிலையில்தான், தியேட்டர்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும் முன்பாகவும், இடைவேளை நேரத்திலும், அரசு சார்பிலான விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன.

ஆனால், அர்ச்சனை செய்ய குருக்கள் கிளம்பும் வேளையில், இடைமறிக்கும், அந்த பெண், "சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்லை. சாமி பெயருக்கு" என்கிறார். அதற்கு குருக்கள், எந்த சாமி பெயருக்கு என கேட்க, அந்த பெண்ணோ "நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்கு தான்" என்கிறார். இந்த டயலாக்கின்போது தியேட்டரில் ரசிகர்கள் கூச்சல் சப்தமும் எழுகிறது. சிலர், ஏய் என கத்துகிறார்கள். தியேட்டரே அமளி துமளி யாகிவிட்டது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. நீங்களும் பாருங்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img