சென்னை:
சைபர் சைக்கோக்களான எச். ராஜா, எஸ்.வி.சேகரால் தமிழகத்துக்கு ஆபத்து; இருவர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் செய்தியாளர் லட்சுமியின் கன்ன த்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்றபோதிலும் அந்த நிருபர் லட்சுமி அதற்காக அவர் கூறிய காரணத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் மிக கீழ்த்தரமான வகையில் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் கிளம்பியதை தொடர்ந்து அவற்றை இருவரும் நீக்கிவிட்டனர்.இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் எஸ்வி சேகர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை. அவதூறு கருத்து தெரிவித்தவர்கள் மீது பத்திரிகையாளர்கள் புகார் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறாக பேசும் எச். ராஜா மீது அரசு வழக்கு தொடரும். தமிழக அரசு யாருக்கும் வக்காலத்து வாங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.எஸ்.வி. சேகர், எச். ராஜா இழிவாக பேசுவதை ஏற்க முடியாது. இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து; பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றார் ஜெயக்குமார். இதனி டையே எஸ்வி சேகருக்கு எதிராக இன்று பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்