img
img

நிர்மலாதேவி சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்: மகளிர் அமைப்பினர் போராட்டம் - போலீஸ் குவிப்பு
வெள்ளி 20 ஏப்ரல் 2018 13:15:58

img

சாத்தூர்:

சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி எதிராக மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்பது நிர்மலா தேவி மீதான புகார். மாணவிகளை மூளைச்சலவை செய்யும் ஆடியோ வெளியாகவே, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்ததால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக விஐபிக்களுக்கு விருந்தாக்குவதற்காக அவர் மாணவிகளிடம் பேசியதில் கவர்னர் தாத்தா இல்லை என்றும் ஒரு இடத்தில் குறிப்பிட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு விசாரணை அமைப்புகளும் நேற்று ஒரே நாளில் விசாரணை நடத்தின.

சிபிசிஐடி சார்பில் எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தினர். அருப்பு க்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி தலைவர், துணைத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரிடம் முதல் கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். இந்த நிலையில் மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலாதேவியை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளனர்.

நிர்மலா தேவியை 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. அதனால் அது தொடர்பாக மனு அளித்துள்ளனர். சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆயுதப்படை காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

வழக்கு தொடர்பான நபர்கள் தவிர வேறு யாரையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. போராட்டக்குழுவினர், மகளிர் அமைப்பினர் யாரே னும் நிர்மலா தேவியை தாக்க முற்படலாம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனிடையே சாத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பேராசி ரியை நிர்மலாதேவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நுழைவாயிலில் நிர்மலாதேவிக்கு எதிராக மகளிர் அமைப்பினர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img