ஹெச்.ராஜா அவதூறாகப் பேசிய விவகாரத்தில், 'கனிமொழி புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கமுடியும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்தும், கனிமொழி குறித்தும் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய கருத்துக்கு, அவருடைய கட்சியி லிருந்தே எதிர்ப்புகள் வந்தன. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண்களைக் கண்ணியக் குறைவாகப் பேசக்கூடாது. கனிமொழி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அவர் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர் புகார் கொடுக்காமல், அரசாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யமுடியாது. இதுகுறித்து, கனிமொழி காவல்துறையில் புகார் அளிக்கலாம் அல்லது நீதி மன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரலாம். அவ்வாறு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் நிதியை மத்திய அரசு குறைத்தால், மத்திய அரசுக்கு உரிய வகையில் அழுத்தம் கொடுக்கப்படும். மாநில அரசின் தன்னாட்சியைப் பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்ப டும்' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்