img
img

வயதைச் சொல்லித் தப்பிக்காதீர்கள்!” - தந்தை பெரியார் திராவிடர் கழகம்
வியாழன் 19 ஏப்ரல் 2018 15:39:25

img

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியையான நிர்மலா தேவி விவகாரம்தான் தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைத் தொடர்புபடுத்தி கருத்துகள் வெளியே வந்துகொண்டிருப்பதால் தகித்துக்கொண்டிருக்கிறது தமிழகம். மாணவ - மாணவியர் மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமிழக ஆளுநருக்கு எதிராகக் களத்தில் குதித்திருக்கின்றன. இதற்கி டையில் இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான  ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து உத்தர விட்டார் தமிழக ஆளுநர்.

அதற்கும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பவே, ராஜ்பவனில் அவசர அவரசமாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அந்தப் பேராசிரியை நிர்மலா தேவி யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. 78 வயதான நான், கொள்ளுப் பேரனையே எடுத்துவிட்டேன். அதனால் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த வழக்கைச் சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரியும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஆளுநர் மாளிகையைத் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே கடு மையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கைதுசெய்தது போலீஸ். 

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு அய்யப்பன், “அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பக்கம்தான் விசாரணை திரும்புகிறது. இது கிரிமினல் குற்றம் என்பதால் போலீஸ் விசா ரணையும், நடவடிக்கையும் இருக்கிறது. அதற்குமுன் பல்கலைக்கழகத்தின் விசாரணை இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசு இருக்கிறது.

இந்த நடவடிக்கைகளில் திருப்திகரமான நடவடிக்கை இல்லாதபோதுதான் ஆளுநர் தலையிடுவது வழக்கம். ஆனால், நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் வெளியானவுடன் உடனடியாக, தன்னிச்சையாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை நியமிக்கிறார். பல்க லைக்கழகம் நியமித்த விசாரணைக்குழுவைக் கலைத்து உத்தரவிடுகிறார். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனும் கதையாக உடனே பிரஸ் மீட் வைத்து, ‘எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அந்தப் பேராசிரியையை நான் பார்த்ததே இல்லை' என்று சொல்கிறார். ஆளுநரின் இப்படியான நட வடிக்கைகள் அவர்மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img