பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்குறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணைப் பேராசிரியையாகப் பணிபுரியும் நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது, உலக அளவில் உள்ள தமிழர்களின் தன்மானத்துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா தேவி எந்தத் தைரியத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்பதைச் சமூக வலைதளங்களின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
மாணவிகளைச் சரியாக வழிநடத்தவேண்டிய ஆசிரியையே இது போன்ற செயல்களைச் செய்வது, ‘வேலியே பயிரை மேய்வது’ போல உள்ளது. நிர்மலா தேவியின் பின்னணியில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் இருப்பார்களோ எனும் சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் தாமாக முன்வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்திருப்பது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது. ஆளுநர், 'எனக்கு 78 வயதாகிறது; எனக்கு பேரன், பேத்திகள் எல்லாம் உள்ளனர்' எனத் தானாகக் கூறுவது சந்தேகத்தையும் எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
தமிழகத்தின் மூத்த குடிமகனாக இருக்கும் ஆளுநர், பத்திரிகையாளரின் கன்னத்தைத் தொட்டது அநாகரிகத்தின் உச்சம். எந்தப் பயமும் இன்றி நள்ளிரவில்கூட ஒரு பெண் தனியாக வெளியில் செல்லும் நிலை வரும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். ஆனால் இங்கு, சிறுமிகள், மாணவிகள், பெண்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுத்துநிறுத்த, கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.
பேராசிரியை நிர்மலா தேவிக்கு கிடைக்கக்கூடிய தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக வேண்டும். தமிழக அளுநரே சந்தேக வளையத்துக்குள் இருபதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்பது சந்தேகம்தான். நிர்மலா தேவின் பின்னணியில் உள்ள ‘பசுத் தோல் போர்த்திய புலிகள்’ போன்ற சக்திவாய்ந்த அதிகாரம் மிக்க நபர்கள் எல்லோரையும் கண்டறிய, நீதிமன்றமே தாமாக முன்வந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக்கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்