‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கிறார்.
‘வேல்ட் வார்-2’ (இரண்டாம் உலகப்போர்-2) என்ற பெயரில் புதிய ஹாலிவுட் படம் தயாராகிறது. ஏற்கனவே இரண்டாம் உலகப்போர் பற்றி நிறைய படங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் இருந்து வித்தியாசமாக ‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
இந்த படத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்தவர். ஹாலிவுட் பட வாய்ப்புக்காகவே அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.