மத்தியப்பிரதேசத்தில், மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில், திருமணத்துக்குச் சென்றுவிட்டு மினி லாரி ஒன்றில் சுமார் 50 பேர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். லாரி, பாலத்தின்மீது சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக சோன் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலி யாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. படுகாயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்க ப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள்குறித்து மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் கவுகான், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்