அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவிகளைத் தவறான முறையில் வழிகாட்டியதாக வெளியான புகாரில் அருப்புக்கோட்டை பேராசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து நேற்றிரவு முதல் அவரிடம் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, ஆளுநர் இன்று அளித்த பேட்டியிலும் சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் நிர்மலா தேவி மீதான பிடி இறுகுகிறது.
இந்நிலையில், நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு 24 நேரம் முடிந்தும் அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லாமல் காவல்துறையினர் தாமதப்படுத்தி வந்தனர். எனினும் இரவு நேரம் ஆனதால், அதற்கு மேல் தாமதிக்க முடியாமல் விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நேற்று போலவே மீடியாக்களிடம் அவர் முகத்தைக்காட்டக் கூடாது என்று நினைத்து அவரை, ஊடகங்களிடம் காட்டாமல் அழைத்துச் சென்றனர். ஆனால், போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அருப்புக்கோட்டை காவல்நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள் கோஷம் போட்டனர். அதன் பின்புதான் போலீஸார் அவரை ஊடகங்களிடம் காட்டினர். இதன்பின் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், முன் நிர்மலா தேவியை போலீஸ் ஆஜர்படுத்தியது. இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஏப்ரல் 28-ம் தேதி வரை அவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்