பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், நீதிமன்றத்தின் முன்னிலையில் சி.பி.ஐ விசாரணை செய்தால் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் பிரமுகர் யார் என்பது தெரியும்' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் இன்று இரவு கண்டனப் பொதுக்கூ ட்டம் நடைபெற உள்ளது. இதில் துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தினகரன் கலந்துகொண்டு பேசு கிறார். இதற்காக, மதுரையிலிருந்து ஒட்டப்பிடாரம் வந்த அவர், கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனாரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவிகளைப் பாலியல்ரீதியாக தவறான முறையில் வழிநடத்த அழைப்புவிடுத்த அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சி.பி.ஐ விசாரணை செய்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் பிரமுகர் யார் என்பது தெரியவரும். ஆனால், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கு முன்பாகவே, ஆளுநர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது ஏன் என்பது தெரியவில்லை.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்களைத் துரிதமாகக் கைதுசெய்த போலீஸார், பேராசிரியை விவகாரத்தில் 7 மணி நேரம் வரை தாமதப்ப டுத்தியது ஏன்? இதில் தமிழக மக்களுக்கு மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய வரைபடத்திலிருந்தே தமிழகத்தை பா.ஜ.க ஒதுக்கிவிட்டது. வரும் 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை பா.ஜ.க அரசு அமைக்கப்போவதில்லை. காவிரி விவகாரத்தில் பா.ஜ.க-வினரின் பேச்சு அவர்களது காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்காகப் போராடுவதை விட்டுவிட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசிவருவது போகாத ஊருக்கு சொல்லும் வழியாக உள்ளது'' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்