மாணவிகள் போன் உரையாடல் விவகாரத்தில் போலீஸாரிடம் சிக்கிய நிர்மலாதேவி, சில முக்கியத் தகவல்களைக் கூறியதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நிர்மலாதேவி. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளிடம் போனில் பேசும் உரையாடல் வெளியாகி, கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த உரையாடல் குறித்து நிர்மலாதேவியிடம் கேட்டபோது, `பேசியது நான்தான். ஆனால், நான் தவறாகப் பேசவில்லை’ என்று கூறினார்.
இந்தநிலையில் நிர்மலாதேவியின் போன் உரையாடலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவரை அருப்புக்கோட்டை போலீஸார் கைது செய்து விசாரித்துவந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "நிர்மலாதேவியிடம் போன் உரையாடல் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், `தவறாக மாணவிகளிடம் நான் பேசவில்லை’ என்ற பதிலை மட்டும் திரும்பத் திரும்ப தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் தேவையில்லாமல் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது.
நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்’ என்று கூறினார். தொடர்ந்து, நிர்மலா தேவியின் செல்போன்களை ஆராய்ந்தபோது அதில் சில மாணவிகளின் புகைப்படங்கள், தொடர்பு எண்கள் ஆகியவை இருந்தன. அதுதொடர்பாக அவரிடம் கேள்விகளைக் கேட்டதற்கு, `மாணவிகள் பாடம் தொடர்பான சந்தேகங்களை என்னிடம் கேட்பார்கள். அதனால்தான் அவர்களின் செல்போன் நம்பர்களைப் பதிவுசெய்து வைத்துள்ளேன்’ என்று கூலாகப் பதிலளித்தார்.
அடுத்து, சமீபகாலமாக நிர்மலா தேவி அடிக்கடி தொடர்பு கொண்ட நம்பர் குறித்து அவரிடம் கேட்டோம். அதற்கும் `பாடரீதியாகத்தான் பேசினேன்’ என்ற பதிலை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிர்மலாதேவியிடம் கேள்விகளைக் கேட்டோம். அதற்கு அவரால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை. அதோடு மழுப்பலான பதில்களைச் சொன்னார். இருப்பினும் நாங்கள் விடாப்பிடியாக அவரிடம் கேட்டதற்கு, `நான் உண்மையைச் சொல்ல தயார். ஆனால், அதன் பின்விளைவுகளைக் கருதி அமைதியாக இருக்கிறேன்’ என்று வாய் திறந்தார்.
அவர் தெரிவித்த முக்கிய தகவல்களை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். அதன் பிறகுதான், சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை நாங்கள் நடத்திய விசாரணை அறிக்கை மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், ஆவணங்கள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.
இதற்கிடையில் நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், சென்னை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நிர்மலாதேவி வழக்கில் செல்வாக்குடையவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, பல்க லைக்கழகத்தில் உள்ள சிலரது பெயர்களையும் தேசிய கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களையும் நிர்மலாதேவி விசாரணையின்போது தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பெயர்கள் அரசியல் மற்றும் பண பலத்தால் வெளிச்சத்துக்குவரவில்லை. நிர்மலாதேவியை மையப்படுத்தியே இந்த வழக்கு வட்ட மடிக்கிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்