சென்னை அடையாறு காவல் சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களின் ரகசிய ரிப்போர்ட் வெளியானதால், போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ரிப்போர்ட்டை வெளியிட்ட போலீஸாரிடம் விசாரணை நடந்துவருகிறது.
சென்னை போலீஸாருக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தொடர்ந்து போலீஸார் சிக்கிவருகின்றனர். பாலவாக்கம் கடற்கரையில் காவலர் கார்த்திகேயன், ஏ.டி.ஜி.பி-யின் மகள் ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாத வீடியோ, காவல் அதிகாரிகளைக் கலங்கடித்தது. தற்போது, புதிய சர்ச்சையில் துரைப்பாக்கம் நுண்ணறிவுப் பிரிவு காவலர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "காவல் நிலையங்களின் செயல்பாடுகளை ரகசியமாகக் கண்காணிக்க மாநகர நுண்ணறிவுப் பிரிவு, உளவுப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த போலீஸார் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள், தினமும் ரிப்போர்ட்டை தங்களின் உயரதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். அடையாறு காவல் சரகத்தில், துரைப்பாக்கம் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவர் அனுப்பிய ரகசிய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அது, எப்படி வெளியானது என்று சம்பந்தப்பட்டவரிடம் விசாரணை நடந்துவருகிறது.
அந்த ரிப்போர்ட்டில் தரமணி, நீலாங்கரை, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், துரைப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்கள்குறித்த தகவல்கள் உள்ளன. மேற்கண்ட காவல் நிலையங்களில், இரவு நேரத்தில் பிடிக்கப்படுவோர், காவல் நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டு பணம் பறிக்கப்படுகிறது. கிண்டி, துரைப்பாக்கம், சைதாப்பேட்டை காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள டீ கடைகள், விதிகளை மீறி 24 மணி நேரமும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இரவு ரோந்து போலீஸார் எதையும் கண்டுகொள்வதில்லை என்று தன் கைப்பட எழுதிய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவலரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்" என்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்