மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் வன்கொடுமை பிரச்னைகள் உள்ளன. எனவே, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் கொந்தளித்தனர்.
அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்க முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயன்ற நிலையில், நேற்று கல்லூரி முன் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மாதர் சங்க நிர்வாகி நிர்மலா ராணி, பெண்களைத் தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாகக் கூறியதால், கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, 3 பிரிவுகளின்கீழ் பேராசிரியை நிர்மலா தேவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சில மணி நேரம் கழித்து நிர்மலா தேவி யைக் கைதுசெய்த போலீஸார், உடனடியாக அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக பேராசிரியர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய பேராசிரியர்கள், ``பல்கலைக்கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட 5 நபர் குழுவினர் மீதும் ஆளுநர் நியமித்த ஒரு நபர் கமிட்டி மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுவருபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றம் தலைமையிலான குழு விசாரணை செய்ய வேண்டும். தற்போதைய ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்னைகள் உள்ளன. எனவே, முழுமையான விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறினர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்