65-வது திரைப்படத் தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. அதேபோல சிறந்த மலையாளப் படமாக தொண்டிமுத்தலும்
த்ரிக்சக்சியும் மற்றும் சிறந்த ஹிந்திப் படமாக நியூடன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. காற்று வெளியிடை படத்தின் பாடல்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார். மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு மற்றொரு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த முறை இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.