விருதுநகரில் நேற்று தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி மதுரை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவண சுரேஷ் நேற்று காலை பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். காவிரி பிரச்னைக்காக தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன் மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் . இந்தத் தகவல் வைகோவை மிகவும் பாதிப்பு அடையச் செய்தது . அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து வைகோ கதறி அழுது தன் நிலையை விளக்கினார். தவறான மீம்ஸ் உள்ளிட்ட விஷ யங்களால் காயப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் `90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே’ என்று தெரி வித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது .
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்