தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலிடம் நடிகர் ஒருவர் இரண்டு முறை காதலை வெளியிட முயற்சி செய்ததாக கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு படங்களில் மும்மரமாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். இந்திபட உலகிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று ஆசைப்ப டுகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா உள்பட ஏராளமான கதாநாயகன்களுடன் காஜல் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த தெலுங்கு பட உலக நாயகர்கள் குறித்து அவர் இப்படி கூறுகிறார்...
“மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர். ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும். அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடை பிடிப்பார். கதாநாயகன்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக் ஆனவர்” என்று கூறியுள்ளார். “நவ்தீப் மட்டும் இரண்டு முறை என்னிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார்” என்று பதில் அளித்து இருக்கிறார்.