சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஐ.பி.எல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். நேற்று, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போட்டியின்போது, மைதானத்தின் உள்ளே செருப்பு வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகா, கேரளாவுக்கு போட்டிகள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அதுகுறித்து, பி.சி.சி.ஐ ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முழு விவரங்களும் இன்று மாலையில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா அளித்த பேட்டியில், 'ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்