காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதேபோல சில தினங்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் சுங்கச்சாவடிகள் போராட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்துக்கு தண்னீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி முற்றுகையிடும் போராட்டம் இன்று நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.
இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 9 மணி முதலே நெய்வேலி அரசுப் பொது மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதில் கலந்துகொள்ள விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் அய்யாக்கண்ணு, பெரியார் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் வருகை தந்திருக்கின்றனர்.
அதையடுத்து இவர்கள் அனைவரும் செவ்வாய் சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா வழியாகப் பேரணியாகச் சென்று என்.எல்.சி-யை முற்றுகை யிடுகின்றனர். ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருப்பதால் திணறி வருகிறது நெய்வேலி நகரம். அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்துவிடாமல் இருக்க ஐ.ஜி.ஶ்ரீதர் மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் மேற்பார்வையில், கடலூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்