''சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், பாம்புகள் உள்ளே வந்தால் நாங்கள் பொறுப்பல்ல'' என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தமிழ்நாட்டின் நீர்உரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம், பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''தமிழகத்துக்கும், கர்நாடகத்து க்கும் இடையே காவிரி நதிநீர் பிரச்னை நடைபெறும்போது, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்தவரை நியமனம் செய்தி ருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி டம்மி முதல்வராகப் பதவியில் இருந்து வருகிறார். நமது உரிமைகளைத் தட்டிக்கேட்க முடியாத இடத்தில் தமிழக அரசு உள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில், பாம்புகள் உள்ளே புகுந்தால் நாங்கள் பொறுப்பல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, ஹெலிகாப்டர் மறைக்கும் அளவுக்கு பெரிய கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்படும். தமிழக மக்களின் எதிர்ப்பை மோடிக்கு உணர்த்தப்படும்'' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்