டெல்லி:
தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என்று கேட்டு டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. அரசியல் கட்சிகளு்ம, விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. காவிரி வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்புகள் ளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று டெல்லி வாழ் தமிழர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ராஜீவ் சவுக் கேட் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாம் தமிழ் தில்லி என்ற தமிழ் அமைப்பினர் ஒருங்கிணைந்த இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக என்ற கோஷம் விண்ணை பிளந்தன. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த போராட்டத்தின்போது குழந்தைள்,இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன், விளையாட்டா , விவசாயமா, விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்று, நீர் இல்லையேல் உழவு இல்லை, உழவு இல்லையேல் உணவு இல்லை ஆகிய பதாகைகள் ஏந்தப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராட்டத்தை ஒருங்கிணைத்த நாம் தமிழ் அமைப்பினர் நாடாளுமன்ற சாலையில் பேரணியும் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னஞ்சிறு குழந்தை ஒன்றின் தலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக என்று பேப்பரில் எழுதி ஒட்டிருந்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்