எப்போதுமே கவர்ச்சி உடையிலேயே வலம் வரும் நடிகை எமிஜாக்சன் புடவை கட்டிக் கொண்டு பெண்களுக்கு பெண்களுக்கு புடவை தான் அழகு என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி உடையில் கலக்குபவர் எமிஜாக்சன். ‘2.0’ படத்தில் ரஜினியுடன் நாயகியாக நடித்திருக்கும் இவர் இணைய தளங்களில் அரைகுறை உடையுடனும், அதுவும் இல்லாமலும் படங்களை வெளியிட்டு வருகிறார்.
உடைகளைப்பற்றி அவர் கவலைப்படுவதும் இல்லை. விமர்சனங்களை கண்டு கொள்வதும் இல்லை. ஆனால், உடை பற்றி இப்போது எமிஜாக்சன் கூறியுள்ள கருத்து, அவர் வெளியிடும் கவர்ச்சி படங்களுக்கு எதிராக உள்ளது. அவர் சொல்லி இருப்பது இதுதான். பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருப்பது புடவை தான். சில நேரங்களில் லெஹன்காவும் அழகு தான். இது பெண்களின் அழகை எடுத்துக்காட்டும். அடக்கமாகவும் இருக்கும். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. சேலை வெளிநாட்டு பெண்களிடமும்
தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் எமிஜாக்சன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் லெஹன்கா உடையில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.