ஞாயிறு 04, டிசம்பர் 2022  
img
img

நடிகர் ஜெயசூர்யா ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 09 ஏப்ரல் 2018 12:46:14

img
நடிகர் ஜெயசூர்யா, ஏரியை ஆக்கிரமித்து தனது வீட்டின் ஒரு பகுதியை கட்டியுள்ளதற்கு எதிரான வழக்கில் நீதிபதி உத்தரவின் பேரில் கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் படகு துறை ஆக்கிரமிப்பை இடித்து அப்புறப்படுத்தினார்கள். பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா, கொச்சியில் உள்ள சிலவனூர் ஏரி அருகில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பங்களா வீடு கட்டி வசிக்கிறார். 
 
வீட்டின் ஓரத்தில் ஏரியை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவரும் தனது படகை நிறுத்த வசதியாக படகு துறையும் கட்டி இருப்பதாக அவர் மீது புகார்கள் கிளம்பின. இதுகுறித்து சமூக ஆர்வலர் கிரீஷ்பாபு என்பவர் போலீசிலும் கொச்சி மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்தார். மாநகராட்சி அதிகாரிகள் ஜெயசூர்யா வீட்டை நேரில் ஆய்வு செய்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது உண்மை என்று கண்டறிந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றும்படி அவருக்கு நோட்டீசும் அனுப்பினார்கள். ஜெயசூர்யா அதை கண்டுகொள்ளவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் ஜெயசூர்யா ஏரியை ஆக்கிரமித்துள்ள பகுதியை இடித்து தள்ளுமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் கடப்பாரையுடன் சென்று படகு துறை ஆக்கிரமிப்பை இடித்து அப்புறப்படுத்தினார்கள். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img