டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட இருந்த இரு பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.
டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் வழக்கமான பரபரப்புடன் நேற்றிரவு இயங்கிக்கொண்டிருந்தது. விமான ஓடுதளம் அருகே கேட்டரிங் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், துபாயிலிருந்து 133 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தது. விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்தும்போது, அதன் இறக்கை அருகில் இருந்த கேட்டரிங் வாகனத்தில் மோதியது. இதில், கேட்டரிங் வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர் தப்பினர்.
முன்னதாக, கடந்த வருடம் இதேபோல ஒரு சம்பவம் நடந்ததில் அதிர்ஷ்டவசமாக 77 பயணிகள் உயிர் தப்பினர். இதேபோல, மாலை 6 மணியளவில், உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் லேண்டிங் கியர் பழுதானால், விபத்து ஏற்பட நேர்ந்தது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த இரு வேறு சம்பவங்களால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்