அ.தி.மு.க கொண்டுவந்த சட்டத்தின்படியே அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் நடந்துள்ளது'’ என பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை, சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாகக் காலியாக இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பா வை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். `அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் நியமி க்கப்பட்டுள்ளார்’ என்று தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. துணைவேந்தர் நியமனம்குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில் `'அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில், தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. அதற்கான குழுவை அமைப்பது மட்டுமே தமிழக அரசின் பணி. ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தரை நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழ கத்தில் அப்துல் கலாம் போன்ற வல்லுநர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அப்படி இருக்க, ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது வருத்தமளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழிசை, ''அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பிக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்ததே அ.தி.மு.க அரசுதான் . அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த சட்டப்படியே துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை’' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்