அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் கூட்டுப்பன்னைத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.க அரசு தட்டிக்கழிக்கவே தமிழக பா.ஜ.க வினர் அரசியல் செய்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில்அப்துல் கலாம் போன்ற வல்லுநர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அப்படி இருக்க ஆளுநர் தன்னிச்சையாக முடி வெடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது வருத்தமளிக்கிறது" என்றார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்