தஞ்சை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள், சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர். தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி யதால் ரெயில் நிறுத்தப்பட்டது. அதேபோல் திருவாரூரில் விவசாயிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
தஞ்சை அருகே செங்கிட்டியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது. நாகையில் காவிரி வாரியம் கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பா ட்டம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலக்தை காவிரி உரிமை மீட்பு குழுவினர் பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்; 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி செங்குன்றத்தில் தேமுதிகவினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்; மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.