என் துறைசார்ந்த கேள்விகள் தவிர அடுத்தவர்களின் கருத்துக்கு பதில் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. இவ்வாறு பதில் சொல்வதற்காகவே எங்க ளிடம் ஜெயக்குமார் என்ற ஒரு அமைச்சர் இருக்கிறார்” எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிரித்தப்படி கூறினார்.
தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் 12 ம் வகுப்புத் தேர்வை நிறைவு செய்ய உள்ள மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு அளிக்கும் இப் பயிற்சிகளில் கலந்துகொள்ள விண்ணப்பித்த மாணவர்களில் அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் உண்டு உறைவிடப் பயிற்சியாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி முதல் 21 நாள்கள் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில் 6 தமிழ்வழி மையங்கள் மற்றும் 3 ஆங்கில வழி மையங்களாக செயல்படும். ஒவ்வொரு பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்ற 4 ஆசிரியர்கள் வழிகாட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
நீட் உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் 29 வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த 9 மையங்களிலும் 3,000 மாணவர்கள் பயிற்சி பெற உள்ளார்கள். மேலும், கூடுதலாக 3 மையங்கள் அமைத்து அதன் மூலம் கூடுதலாக ஆயிரம் மாணவர்கள் வரை பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் மே மாதம் இறுதி செய்யப்படும். அடுத்தாண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். இப்பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ.-ஐ மிஞ்சும் வகையில் மாற்றி அமைக்கப்படும்” என்றார்.
கல்வித்துறை குறித்து கமலின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கேள்விகள் எதுவானாலும் கேளு ங்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு நான் பதில் சொல்லி பழக்கம் இல்லை. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவே எங்களிடம் ஜெயக்கு மார் என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்னை விட்டுவிடுங்கள்” என்று சிரித்தப்படி கூறினார். செங்கோட்டையனின் இப்பேச்சுக்கு அருகில் இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் சத்தமாகச் சிரித்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்