img
img

தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி.டி.வி.தினகரன் முக்கிய வேண்டுகோள்!
வெள்ளி 06 ஏப்ரல் 2018 12:01:44

img

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி போராட்டம் நடந்துவரும் இச்சூழ்நிலையில், போராட்டத்துக்கு மேலும் ஆதரவு திரட்டும் பொருட்டு இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்க ணிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இந்தக் கோரிக்கை தற்போது வலுப்பெறத் தொடங்கியுள்ளது. தமிழ் அமைப்புகள் பலவும், இந்தக் கோரிக்கையை சமூக வலைதளங்களில் வலி யுறுத்தி வருகின்றனர். மேலும், ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிகள் நடை பெறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் எனக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதில்,`தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர்ப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நமக்கு இழைக்கும் துரோகத்துக்கு எதிராகத் தமி ழகமே பொங்கி எழுந்திருக்கிறது. விவசாயிகளின் வேதனையில் பங்கெடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என நாள்தோறும் நடத்தி, தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்திவரும் இந்த நேரத்தில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது. காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img