img
img

நாடாளுமன்றம் வளாகம் அருகே எதிர்கட்சிகள் போராட்டம் சோனியா காந்தி-ராகுல் காந்தி பங்கேற்பு
வியாழன் 05 ஏப்ரல் 2018 12:13:59

img
புதுடெல்லி,
 
நாடாளுமன்றத்தில் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது முதலே கடும் கூச்சலும் குழப்பமும் நிலவி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் இரு சபைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கி வரு கின்றனர்.
 
இதனால் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் பா.ஜனதா அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் இதுவரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மக்களவையில் நேற்றும் இதே நிலை நீடித்தது. இதனால் சபாநாயகர் நாள் முழு வதும் சபையை ஒத்திவைத்தார். மாநிலங்களவை நேற்று 10 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரு சபை களும் 20-வது நாளாக தொடர்ந்து முடங்கியது.
 
இந்தநிலையில் இன்று நாடாளுமன்றம் வளாகம் அருகே வங்கி முறைக்கேடு, விவசாயிகள் பிரச்சனை, நம்பிக்கையில்லா தீர்மானம், எஸ்.சி. எஸ்.டி சட்டம், ஏர் இந்தியாவில் பங்குகள் விலக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போரா ட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img