நதிகள் இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்ததுபோல, காவிரிப் பிரச்னைக்காக ரஜினி உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. எனினும், எந்தத் தேதியில் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பதுபற்றித் தெரியவில்லை
காவிரி நதிநீர்ப் பிரச்னை தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இந்தப் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மட்டும் கருத்து தெரிவித்துவிட்டு அமைதியாக உள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, காவிரி விவகாரத்தில் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழக திரைத்துறை சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்தில்,ரஜினி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நதிநீர் இணைப்புக்காக ஏற்கெனவே உண்ணாவிரதம் இருந்ததுபோல, காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். எந்தத் தேதியில் உண்ணாவிரதம் இருப்பது என்பதுகுறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன், ரஜினி ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்