img
img

முழுஅடைப்பு! - புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு
வியாழன் 05 ஏப்ரல் 2018 12:07:20

img

புதுச்சேரியில், தமிழகப் பேருந்துகள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரத்  தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரியில் தி.மு.க சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பு காரணமாக நேரு வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, குபேர் அங்காடி உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழு வதுமாக அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ள்ளது. பேருந்துச் சேவைகளைப் பொறுத்தவரை புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. 

இதனிடையே, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புதுச்சேரி பேருந்து நிலையம் வந்த 4 தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. மேலும், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து கண்ணாடி உடைப்பு

தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் பேருந்து நிலைய வளாகம், இந்திரா காந்தி சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img