சென்னை
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக் காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து உள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறி இருப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழு வதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் மு.க ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி யினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட பின், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணியாக செல்கின்றனர். அண்ணா சாலையில் இருந்து மெரினா நோக்கி சென்ற மு.க.ஸ்டாலின் வாலாஜா சாலையில் அமைந்து மீண்டும் சாலை மறியல் ஈடுபட்டார்.
கி.வீரமணி,திருநாவுக்கரசர்,திருமாவளவன்,ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்ற்று உள்ளனர். சென்னை சேப்பாக்கம் பகுதியில் பேரணி சென்றவர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கி.வீரமணி ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சாலை மறியல் போராட்டத்தால் அண்ணா சாலை-வாலஜா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சென்னை காமராஜர் சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் கைது.
திருவள்ளூர்: திருத்தணி- சென்னை செல்லும் மின்சார ரயிலை மறித்து திமுக கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் : திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பேரணி செல்லும்போது, சாலையோரம் நின்ற லாரி மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர்.
திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி : திருவெறும்பூரில், திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் ரெயில் மறியல் போராட்ட்டத்தில் ஈடுபட்ட னர்.திருச்சி தலைமை தபால்நிலையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளுர் : பொன்னேரி ரயில் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியல் போராட்ட நடத்தினர்..
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் அமர்ந்து திமுகவினர் ரயில் மறியல் செய்தனர்.
தஞ்சை ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சை : கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.
நாமக்கல் : குமாரபாளையம் பகுதியில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கபட்டது.
கிருஷ்ணகிரி : மோட்டூரில் 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர்.