img
img

தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் ரயில்கள் நிறுத்தம், தி.மு.க தொண்டர்கள் கைது
வியாழன் 05 ஏப்ரல் 2018 11:51:10

img
சென்னை
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி தாமிரபரணி ஆற்று ரயில் பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதே போன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
மறியலில் ஈடுபட்ட திமுக, காங்., விவசாயிகள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இதேபோல் திருச்சி - லால்குடி ரயில் நிலையத்தில் மதுரை - சென்னை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக.,வினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மாத்தூரில் கடலூர்-திருச்சி பயணிகள் ரயிலை மறித்து திமுக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
 
மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலால் புறநகர் ரயில் உட்பட 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் கோவையிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
திருவள்ளூர்: திருத்தணி- சென்னை செல்லும் மின்சார ரயிலை மறித்து திமுக கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
 
திருச்சி: திருவெறும்பூரில், திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் ரெயில் மறியல் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
 
திருவள்ளுர் : பொன்னேரி ரயில் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியல் போராட்ட நடத்தினர்.
 
தஞ்சைரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சை ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
 
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் அமர்ந்து திமுகவினர் ரயில் மறியல் செய்தனர்.வாணியம்பாடி ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற டபுள் டக்கர் ரயிலை மறித்து காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மதுரை ரயில் நிலையத்தில், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் பாதுகாப்பையும் மீறி போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி : புள்ள ம்பாடி ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து திருச்சி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img