என்னைப் பொறுத்தவரைக்கும் மற்ற துறைகளைவிட பொண்ணுங்களுக்கு மாடலிங் பாதுகாப்பான துறைதான்' என உற்சாகமாகப் பேசத் தொடங்கு கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் துர்கா. மாடலிங்கிற்கு மட்டுமல்ல இவரது டப்ஸ்மாஷூக்கும் சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும், டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்கும் பல ஆயிரம் லைக்ஸ் குவிகிறதாம்.
துர்கா பற்றி சொல்லுங்க..?'
என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போ எனக்கு இருபது வயசாகுது. என் அம்மாவும், அப்பாவும் பேராசிரியரா வேலை பார்க்குறாங்க. உண்மையைச் சொல்லணும்னா நான் எங்க அம்மா, அப்பாவுக்கு வளர்ப்பு குழந்தை. என்னைத் தத்தெடுத்திருந்தாலும், என் சொந்த அம்மா, அப்பாவை விட நல்லா பார்த்துக்குறாங்க.''
மாடலிங் பயணம் எப்போது ஆரம்பித்தது..?'
எனக்குச் சின்ன வயசுல இருந்தே மீடியா ஃபீல்டு மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு. என் ஃபேமிலில என் அம்மாவும், அப்பாவும் என்னைப் பாசமா பார்த்து க்கிட்டாலும் எங்க சொந்தக்காரங்க என்னைக் கொஞ்சம் வெறுப்போடதான் அணுகுனாங்க. பல நாள்கள் தனிமையில் நிறையவே ஃபீல் பண்ணி யிருக்கேன். அவங்களுடைய பிரஷர்னால பிளஸ் டூ முடிச்சதும் எனக்குத் திருமணம் செஞ்சுடலாம்னு அப்பா முடிவு பண்ணாங்க. ஆனா, எனக்கு நான் யாருன்னு நிரூபிக்கணும்னு விருப்பம் அதுனால அம்மாவோட சப்போர்ட்டோட மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் என் அப்பாவும் என் விருப்பத்துக்கு முழுமனசோட இல்லனாலும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டார். இப்படித்தான் என் மாடலிங் பயணம் ஆரம்பிச்சது.''
இடையில் மாடலிங்கிற்கு பிரேக் விட்டுருந்தீங்களே..?'
எனக்குக் கொஞ்சம் ஹெல்த் பிரச்னை ஏற்பட்டுச்சு. அதுனால டாக்டர் முழுசா ரெஸ்ட் எடுத்தே ஆகணும்னு சொல்லிட்டார். அதுக்காகத் தான் கொஞ்சம் பிரேக் எடுத்தேன். இப்போ ஹெல்த் பிரச்னைகள் எல்லாம் சரி ஆகிடுச்சு. இன்னும் ரெண்டு மாசத்துல மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துடுவேன்.''
டப்ஸ்மாஷ்ல பயங்கர பிரபலம் ஆகிட்டீங்களே..?'
வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தப்போதான் பொழுதுபோக்குக்காக டப்ஸ்மாஷ் பண்ணேன். அதைப் பார்த்துட்டு என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அதுக்கப்புறமாதான் நிறைய டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன். நிறையப் பேர் எனக்கு இன்பாக்ஸ் பண்ணி உங்க கூட டப்ஸ்மாஷ் பண்ணனும்னு விரும்புறேன்னு சொல்லுவாங்க. இப்போ ரீசன்ட்டா பிரியா வாரியர் - ரோஷன் பிரபலமான சீன்ல பிரியா வாரியர்க்குப் பதிலாக நான் ரோஷன் கூட சேர்ந்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ணிருக்கேன்.''
மறக்கமுடியாத டப்ஸ்மாஷ்..?'
நான் 'வாமனன்' படத்துல ஊர்வசி மேடம் நடிச்ச காமெடி சீனை வைத்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ணேன். அதை என் ட்விட்டர்ல அப்லோடு பண்ணி யிருந்தேன். அதைச் சந்தானம் சார் ரீ-ட்விட் பண்ணியிருந்தாங்க. அந்த டப்ஸ்மாஷ்தான் என் ஃபேவரைட். ''
பட வாய்ப்புகள் வந்துச்சா..?'
நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, பெரும்பாலும் இயக்குநர்கள் நடிக்கிறதுக்குத் தேவையான திறமை அந்தப் பொண்ணுகிட்ட இருக்கான்னு பார்க்க மாட்டேங்குறாங்க. உடம்பு நல்லா இருக்கான்னுதான் பார்க்குறாங்க. நிறைய பேர் என்கிட்ட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. முடியாதுன்னு சொன்னதாலேயே நிறைய வாய்ப்புகள் தவற விட்டேன். மாடலிங்ல கூட இந்த மாதிரி பிரச்னைகளை நான் சந்திக்கல. சினிமாவில் நடிக்க ணும்னு ஆசை இருக்கு. என் திறமையை மட்டும் பார்த்து எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். நிறைய சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அப்போ என்னுடடைய ஹெல்த் பிரச்னையால சீரியலில் நடிக்க முடியல. இப்போ சினிமா மட்டுமில்ல சீரியலில் நடிக்கவும் ரெடியா இருக்கேன்.''
இப்போ நீங்க மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ண சீரியல்..?'
ஜீ தமிழில் இப்போ ஒளிபரப்பாக இருக்கிற `ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. எனக்கு அந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சி ருந்துச்சு. என் போட்டோ பார்த்துட்டு என்னைக் கூப்டாங்க. நேர்ல என்னைப் பார்த்ததும் என்னங்க இவ்வளவு ஒல்லியா இருக்கீங்க. எங்களுக்குக் குண்டான பொண்ணுதான் தேவைன்னு சொல்லிட்டாங்க. நேத்துதான் அந்தத் தொடருடைய புரொமோ பார்த்தேன். மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தமா இருந்துச்சு.''
படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி
மேலும்