ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடுவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியடைந்த தெலுங்கு தேசம் கட்சித் தலை வரான சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையிலிருந்தும் தனது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், டெல்லி வந்துள்ள சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அந்தத் தலைவர்களிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திரபாபு நாயுடு இன்று சந்திக்கவுள்ளார். ஆந்திர பவனில் தங்கியிருக்கும் சந்திரபாபு நாயுடுவை கெஜ்ரிவால் சென்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்