சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் போராட்டம் வெறும் கபட நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது போல் கபட நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி: செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் நடத்துவது போராட்டம் இல்லை, அடிமைத்தனமான கபட நாடகத்தை நடத்துகின்றனர். எடப்பாடி அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட தகுதி இல்லை, சட்டபேரவை கூட்டு அமைதியாக கூட்டம் நடத்தினர். ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை, உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகம் மீது அக்கறை இருந்தால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சட்டபேரவையில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற தகுதியில்லாமல் அரசாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமி அரசு துளி அளவிற்கு கூட அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் குதிரைபேரம் ஆட்சி நடக்கிறது, காரணம் அவர்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள மத்திய அரசிடம் அடிமைத்தனமாக இருக்கிறார்கள். இதனால்தான் திமுகவினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்