சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர், வருகிற 5ம் திமுக நடத்தும் போராட்டத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரதமரை சந்தித்து கடிதம் அளித்ததாகவும் காவிரி நீர் கிடைக்காததால் காரைக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.
இதனிடையே அவதூறு வழக்கு தொடர அனுமதி அளிக்க துணைநிலை கிரண்பேடி மறுத்ததால் கொறடா சார்பில் மனு தாக்கல் செய்ததாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசுக்கு எதிரான வழக்கு என்பதால் கிரண்பேடி கையெழுத்திடவில்லை என்று கூறினார். இதற்கிடையே புதுச்சேரி விவசாயிகளின் நலனே தங்களுக்கு முக்கியம் என்றும் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 7 tmc காவிரி நீரை பெறத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், புதுச்சேரி விவசாயிகளுக்காகவும், மக்க ளுக்காகவும் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார் என்று தெரிவித்தார். இறுதியாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி என்றாலும் எங்களுக்கு புதுச்சேரி விவசாயிகளே முக்கியம் என்று அம்மாநில முதல்வர் கூறியிருப்பது குறிப்பிடதக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்