பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரை அவர் சந்திக்க உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆறு வார கால கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்கவில்லை. அதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. கடையடைப்பு, உண்ணாவிரதம், ரயில் மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்துவருகின்றன. இதேபோல, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், நியூட்டிரினோவுக்கு எதிராகவும், ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே, இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்ட நிலைமை குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமரைச் சந்திக்கும் அவர், காவிரிக்காக தமிழகத்தில் நடந்துவரும் போராட்ட நிலைகுறித்துப் பேசிவருகிறார். அடுத்து அவர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்செய்வார் என்று தெரிகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்