img
img

கையாலாகாத அரசை எதிர்த்துப் போராடுவோம்' - திருச்சியில் டி.டி.வி.தினகரன் ஆவேசம்
செவ்வாய் 03 ஏப்ரல் 2018 12:14:49

img

கரும்பு விலை உள்ளிட்ட விவசாய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் வாழாவெட்டியாக உள்ள, இந்த கையாலாகாத அரசை எதிர்த்துப் போராடுவோம்" என்று டி.டி.வி.தினகரன் ஆவேசமாகப் பேசினார்.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக் கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  திருச்சி விமான நிலையத்தை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் குவிந்தனர். இந்தப் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அவரை வரவேற்க சுமார்  4000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். கூட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விமான நிலையத்துக்குள் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பதற்றம் நிறைந்த சூழலில் மைக் பிடித்த டி.டி.வி.தினகரன், ``தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடுவோம். குறிப்பாக தேனியில் செயல்படுத்த உள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும் போராட உள்ளோம்.

அதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்னைக்காக நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முறையே நீதிமன்ற அனுமதிப்படி வரும் 8-ம் தேதி ஸ்டெர்லைட் பிரச்னைக்காக போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் மண்ணில் கிடைக்கும் எந்தப் பொருளை விவசாயிகள் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் மண்ணுக்குள் கிடைக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்போம். நிச்சயமாக அம்மா ஆட்சி நம் தலைமையில் அமையும். அப்போது இந்தத் திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி எதிர்த்தாரோ அதே போல் நாம் இத்தகைய மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்போம்.

கரும்பு விலை உள்ளிட்ட விவசாய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் வாழாவெட்டியாக உள்ள, இந்த கையாலாகாத அரசை எதிர்த்துப் போராடுவோம். விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்களைப் பாதிக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராடும். திருச்சியில் விமான நிலைய விரிவாக்கத்துக்காகவும், பி.எச்.எல் பகுதியை அழிக்கும் வகையான செயல்பாடுகளை அந்தப் பகுதி மக்களை ஒன்று திரட்டிப் போராடுவோம். மக்கள் நலனுக்காகப் போராடும் இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். தமிழகம் தலைநிமிரட்டும், தமிழக மக்கள் வாழ்வு வளம் பெறட்டும் அதற்காக போராடுவோம்" எனப் பேசினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img